இந்துக்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறது தமிழக அரசு: இந்து முன்னணி

53பார்த்தது
இந்துக்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறது தமிழக அரசு: இந்து முன்னணி
மதசார்பற்ற அரசு எனக் கூறிக்கொண்டு தமிழக அரசு, இந்துக்களிடம் அப்பட்டமாக ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், சிறுபான்மையினர் மத தலைவர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் பலவித நிதி உதவிகளை அறிவித்தார் என செய்திகள் கூறுகின்றன. அதில் மிக முக்கியமானது ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 37 ஆயிரம் நிதி உதவி நேரடியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், சர்ச், மசூதி, தர்கா முதலானவற்றை பழுதுபார்ப்பதற்கான அரசின் நிதி உதவியையும் அதிகரித்து அறிவித்துள்ளார். 

தமிழக அரசின் முதல்வர், சிறுபான்மை மதத்தினரின் மத நம்பிக்கையை மதிப்பதும் அதற்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து நிதியை வாரி கொடுப்பதும் அவரது கட்சியின் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால், ஜனநாயக முறைப்படி பதவியேற்ற அரசாங்கம் ஓரவஞ்சனையாக, ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது. 

மேலும் கோயில் இடங்களை சட்டவிரோதமாக அரசு துறைகள் விழுங்குவதற்கு இந்து சமய அறநிலையத் துறை துணைபோகிறது. இத்தகைய ஓரவஞ்சனை போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி