ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் அகற்றம்

62பார்த்தது
புழல் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் அகற்றும் பணி நடைபெற்றது

புழல் எம்ஜிஆர் நகர் பகுதியில் நேற்று சுமார் 75 வீடுகள் நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தி கட்டப்பட்டிருந்த வீடுகளை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் காவல்துறை உதவியுடன் அகற்றி வந்தனர் இன்று தொடர்ந்து புழல் விநாயகபுரம் காஞ்சி நகர் பகுதியில் நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் ஆறு மீன் பண்ணை அகற்றுப்பணியை இன்று அதிகாலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து காவல்துறை உதவியுடன் அகற்றும் பணியை நடைபெற்று வருகிறது.

மேலும் பாதுகாப்பு பணிக்காக சென்னை குளத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பெண் காவலர்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையை துரிதப்படுத்தினார்.

இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகள் மாதவரம் கோட்டாட்சியர் மாதவரம் தாசில்தார் என பல்வேறு அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி