திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

60பார்த்தது
திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி. மு. க. சார்பில்
திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளரும் திருவொற்றியூர் 1 வந்து மண்டல குழு தலைவருமான தி. மு. தனியரசு ஏற்பாட்டில் மு. க‌. ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு
2025-26 நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவொற்றியூர் ராஜாகடை எழுத்துக்காரன் தெருவில் நடைப்பெற்றது.
சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சுதர்சனம் தலைமையில் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர், மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் அண்ணன் தி. மு. தனியரசு நிகழ்ச்சி ஏற்பாட்டில் தலைமை கழக வழக்கறிஞர், 12வது வார்டு மாமன்ற உறுப்பினர்
வீ. கவிகணேசன்
கிழக்கு பகுதி துணை செயலாளர்
எம். வி. குமார் வரவேற்ப்பில்
நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிதிநிலை அறிக்கையை விளக்கி கழக துணை அமைப்பு செயலாளரும், திரு. வி. க. நகர் சட்டமன்ற உறுப்பினருமான
மருத்துவர் வழக்கறிஞர் ப. தாயகம் கவி தலைமை கழக பேச்சாளரும் மாநில இலக்கிய அணி துணை செயலாளருமான ஆடுதுறை உத்திராபதி விளக்கு சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 20 பேருக்கு தையல் இயந்திரம் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புடவை வழங்கப்பட்டது.
12வது வார்டு வட்ட கழக செயலாளர் க. வி. சதிஸ்குமார் Ex. Mc. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி