விசாலாட்சி அம்மன் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

63பார்த்தது
திருவள்ளூர் அருகே உள்ள பாண்டூர் விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து புனித நீரை தெளித்துக் கொண்டனர்


திருவள்ளூர் அருகே உள்ள பாண்டூர் அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் ஈன்றெடு புது கோவிலில் நன்னீராட்டு மகா கும்பாபிஷேகம் பெரு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது மதுராந்தகம் அருள் குருநாதர் குரு பழனி ஆதீனம் திருக்குறள் பீடத்தின் இரண்டாவது பீடாதிபதிகள் சிவத்திரு குரு பழனி அடிகள் தலைமையில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நதிநீர் தீர்த்தங்களை கொண்டு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
யாக கலச பூஜை நடைபெற்று பாண்டூர் குளக்கரையில் அர்ஜுனன் வழிபட்ட ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து கைலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்த புனித நீரை விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் மூர்த்தங்களில் கலசங்களில் இருந்த நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர் பின்னர் கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மீது தெளித்து வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து பிரகாரம் மூர்த்தங்களான விநாயகர் வள்ளி தேவயானி சமேத பாலசுப்பிரமணியர் நந்தீஸ்வரர் கால பைரவர் நவக்கிரக மூர்த்தங்களுக்கு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி