திருவொற்றியூர் அக் 8 மின்சாரக் கம்பியில் கிரேன் உரசியதால் லாரி உரிமையாளர் மரணம்
திருவொற்றியூர்
அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 40 இவர் சொந்தமாக லாரி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலை தனது லாரியில் இரும்பு உருளைகளை ஏற்றுக்கொண்டு சாத்தாங்காடு ஸ்டீல் யார்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இறக்கிக் கொண்டிருந்தார் மூன்று டன் எடையுள்ள ஸ்டீல் உருளையை கிரேன் உதவியோடு இறக்கும்போது கிரேன் மேலே இருந்த அழுத்த மின்சாரக் கம்பியில் உரசி உள்ளது.
அப்போது இரும்பு உருளையை பிடித்துக் கொண்டிருந்த லாரி உரிமையாளர் மாரிமுத்து உயர் அழுத்த மின்சார கம்பி கிரேன் மீது உரசி மாரிமுத்து தூக்கி வீசப்பட்டார். அப்போது அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது, விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர் மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இறந்து போன மாரிமுத்துக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும் 7 வயதில் இரட்டை குழந்தைகளும் உள்ளன. கிரேன் ஓட்டுநர் ஜோதிலிங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.