சிறுவனுக்கு தவறான சிகிச்சை மருத்துவமனை முற்றுகை

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த ராஜன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் -கண்ணம்மா இவர்களுக்கு
7ம் வகுப்பு பயிலும் 11 வயதுடைய மகன் கிஷோர் இருந்து வருகிறார்,
சிறுவன் கிஷோரை கடந்த 12ந் தேதி சாலை விபத்தில் கிஷோருக்கு வலது கால் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து
அவரை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்,
மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து
பின்னர் மேல் சிகிச்சைக்கு திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அரசு மருத்துவர் ஒருவரை சிபாரிசின் பேரில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது,
பின்னர் 14ஆம் தேதி அன்று சிறுவனுக்கு கால் வீக்கம் அதிகமானதால் தண்டலம் பகுதியில் உள்ள சவிதா தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காலில் நரம்புகள் துண்டிக்கப்பட்டு சிகிச்சை அளித்து இருப்பதால் ரத்த ஓட்டம் தடைபட்டு இருப்பது கண்டறிந்துள்ளனர்
சிறுவனுக்கு தொடக்கத்தில் தவறான அறுவை சிகிச்சை அளித்த காக்களூர் தனியார் மருத்துவமனையை இன்று காலை பாதிக்கப்பட்ட சிறுவனுடன் பெற்றோர்கள் அவருடைய உறவினர்கள் வருகை தந்து முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி