சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் திட்டப்பகுதியில் பழுதாகி இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்புகளை புதிதாக கட்டிட மாண்புமிகு முதல்வர் முக.
ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு முன்னெடுத்து வருகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கலந்துகொண்டார். மாண்புமிகு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கலாநிதி வீராச்சாமி கே. பி. சங்கர் MLA, மண்டல தலைவர் தி. மு. தனியரசு MC, கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்