சென்னை வடகிழக்கு மாவட்டக்கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் இன்று நடைபெற்றது. சேலத்தில் வரும் 17. 12. 2023 அன்று நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாடு, 14. 10. 2023 அன்று சென்னையில் நடைபெறவுள்ள மகளிர் மாநாடு குறித்தும், வாக்காளர் சேர்ப்பு, கழக பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கழக முன்னணியினர், மாவட்டக்கழக நிர்வாகிகள், பகுதி, வட்டக்கழக நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், கழக தோழர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.