எர்ணாவூர்: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு: 2 சிறுவர்கள் கைது

84பார்த்தது
எர்ணாவூர்: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ் (38), திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளர். இவர் கடந்த 10ம் தேதி விம்கோ நகரிலிருந்து பீச் ரயில் நிலையம் நோக்கி மின்சார ரயிலில் பயணம் செய்தார். தண்டையார்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது அவருடைய பாக்கெட்டில் இருந்த செல்போன் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருடர்களைத் தேடினர். இதில் வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம், கொல்லாபுரி நகர் மற்றும் எர்ணாவூர் ரெட்டமலை சீனிவாசன் நகரைச் சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், சிறுவர் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி