சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது 2000 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலில் பல வரலாற்று சிறப்புகளை ஞாபகப்படுத்தும் விதமாக பிரம்மோற்சவ விழாவில் வாழையடி வாழையாக விழாக்களை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக பல்லக்குகளில் 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடைபெற்றது. சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், வந்து சன்னதி தெருவில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு காட்சி கல்யாண கோலத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது இதைத்தொடர்ந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை வந்து தெற்குமாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வந்து சன்னதி தெருவுக்கு வந்தடைந்தது.