அம்மன் கோவிலில் 10ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

59பார்த்தது
கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீஅருள்மிகு துலுக்காணத்தம்மன் திருக்கோவில்
10ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜை நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் 150பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர்.

பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர்.
இந்த தீமிதி திருவிழாவை காண 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்

தொடர்புடைய செய்தி