ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சம் இழந்த விரக்தியில் ரயில் முன்பு பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அருகே வயலாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வாசுதேவன் மகன் தமிழ்செல்வன்(25).
தொழில் நுட்பத்தில் பட்டயம் முடித்துள்ள இவா் ஸ்ரீபெரும்புதூா் அருகே சுங்குவாா்சத்திரத்தில் உறவினா் வீட்டில் தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா்.
மேலும், அடிக்கடி ஆன்லைன் சூதாட்ட்டத்தில் ஈடுபட்டு வந்தாராம். அதோடு, தன்னுடைய ஊதிய பணம் மற்றும் கடன் வாங்கியும் ரூ. 10 லட்சத்தை சூதாட்டத்தில் இழந்தாராம். இதைத் தொடா்ந்து வீட்டில் பெற்றோா் மற்றும் உறவினா்கள் அனைவரும் சமதானம் செய்து வைத்துள்ளனா்.
இதனால் ஏற்பட்ட விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூருக்கும்-ஏகாட்டூருக்கும் இடையே வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடா்பாக அறிந்த திருவள்ளூா் இருப்பு பாதை காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி அவரது தந்தை வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் ரயில்வே இருப்பு பாதை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.