பழவேற்காடு, எடமணி கிராமத்தில் வசிக்கும் சம்பத் என்பவர் இன்று காலை எடமணி கிராமத்திலிருந்து பசியாவரம் மேம்பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சிசிடிவி பதிவை வைத்து மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என கிராம மக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் மேற்கொண்ட பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.