மதுரவாயலில் பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதல் டிரைவர் பலி, மெக்கானிக் காயம்
பழுதாகி நின்ற காரை சரி செய்தபோது நேர்ந்த சோகம்
மதுரவாயல் அடுத்த ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன்(33), காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் பிரபாகரன்(52), என்பவர் ஓட்டி வந்தார். தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் அடையாளம் பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கார் பழுதாகி நின்றது இதையடுத்து அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கார் மெக்கானிக் சிட்லபாக்கத்தை சேர்ந்த ரவி 33 என்பவர் காரில் இருந்த பழுதை பார்த்துக் கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியபடி நின்றது இதில் கார் டிரைவர் பிரபாகரன் பரிதாபமாக உடல் நசுங்கி இறந்து போனார். மெக்கானிக் ரவி பலத்த காயம் அடைந்தார் இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார் 52 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்