விசிக வில் இருந்து விலகிய ஆதவ் பாமகவில் சேர விருப்பம் தெரிவித்தால் பரிசிளிப்போம்: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த விரைந்து நடத்த வேண்டும்: திருவள்ளூர் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி திருவள்ளூரில் பேட்டி
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமகவின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பால யோகி மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி கலந்து கொண்டு உழவர் உழவர் மாநாட்டிற்கு ஒன்றியங்கள் வாரியாக எவ்வளவு பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்பதை குறித்து கேட்டறிந்தார்
மேலும் இந்த பொதுக்குழுவில் வன்னியர்களுக்கு 10. 5 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் வெங்கத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது