திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

80பார்த்தது
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசமாக திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். 108 திவ்ய தேசங்களில் 59-வது திவ்யதேசமான திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்த பின்னர் வெள்ளி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் வைத்திய வீரராகவ பெருமாள் எழுந்தருளினார். அதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி