தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவள்ளூர் மாவட்ட கேபிள் டிவி தனி வட்டாட்சியர் துணை மேலாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நல வாரியத் தலைவர் ஜோ ஜீவா எச் டி தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ்களை ஆபரேட்டர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார் திருவள்ளூர் கேபிள் டிவி தாசில்தார் விமலா மற்றும் திருவள்ளூர் மாவட்ட டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் பிரபாகரன் வாரிய உறுப்பினர்கள் காயல் ஆர் எஸ் இளவரசு ஆத்மராம் தலைமை அலுவலக துணை மேலாளர் மணிகண்டன் உள்ளிட்ட அரசு கேபிள் டிவி அலுவலர்கள் பங்கேற்றனர்.
5 லட்சத்திற்கும் மேல் ஏற்கனவே பழைய hd செட்டாப் பாக்ஸ்கள் ஆபரேட்டர்கள் வசம் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 70 ஆப்பரேட்டர்கள் 5000 புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது என்றும் அடுத்தாண்டு 2025 பிப்ரவரி மாதத்திற்குள் 25 லட்சம் எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என ஜோ ஜீவா தெரிவித்துள்ளார் முதலமைச்சர் தனிகவனம் செலுத்தி வருவதாகவும் 50 லட்சம் எச்டி செட்டாப் பாக்ஸ்கள் இலக்கை எட்டுவது அரசின் குறிக்கோள் என்றார் இதற்கு ஆப்பரேட்டர்கள் தரப்பில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்