திருவள்ளூர்: மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் பேரணி

64பார்த்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக கூறி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் எம்பி சசிகாந்த் செந்தில் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிய ஊர்வலம், குளக்கரை சாலை பஜார் வீதி கடந்து சென்னை திருப்பதி நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் சென்ற போது, ஒரு சிலர் மட்டுமே ஆட்சியர் அலுவலகத்தில் செல்ல காவல் துறையினர் அனுமதி வழங்கிய நிலையில், அனைவரும் உள்ளே செல்ல முயற்சித்த போது காவல் துறைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் வடக்கு மாவட்ட செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திர சேகர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் அனுமதித்தனர். பின்னர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும், மோடி அமித் ஷாவை பதவி நீக்கம் செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கரிடம் மனு அளித்தனர். அந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி