திருவள்ளூர் மாவட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் கொட்டும் மழையில் குடைகளை பிடித்துக்கொண்டு மாவட்ட தலைவர் ஏ. சிவா, தலைமை
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும்
சமூக நீதி கொள்கைகள் மற்றும் பெண்கள் நலனுக்கு எதிராக ரூ. 3000 தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.