திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பேரூராட்சி, திருவள்ளூர் நகராட்சி, பூண்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளில் இன்று பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் திரு. வி. இராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரிஷப், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) மாஹின் அபுபக்கர், மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.