திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு அடுத்த பரதேஸ்புரம் பகுதியில் கோபி என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணை உள்ளது
இந்த முயல் பண்ணையில் தங்கி
வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை என்று கோபி செல்போன் மூலம் விளம்பரம் செய்து இருந்தார்
இதைப் பார்த்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த யுவன் சங்கர் என்பவர் திருமணமாகி 20 நாட்களை ஆன நிலையில் தனது மனைவியுடன் முயல் பண்ணையில் தங்கி
வேலை செய்வதற்காக வந்திருந்தார்,
வேலை பளு காரணமாக யுவன் சங்கர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து இரவு தப்பிச் சென்று கொண்டிருந்தபோது, அருகில் இருந்த கிணற்றில் மனைவி கண் முன்னே தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார் அவரது உடலை சுமார் 2 மணி நேரம் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
திருமணம் ஆகி 20 நாளில் கணவர் உயிரிழந்ததால் மனைவி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.