தம்பதி கண் முன்னே குழந்தை பலி

545பார்த்தது
தம்பதி கண் முன்னே குழந்தை பலி
திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சேகர், 39; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மனைவி பூங்கோதை, 35, இவர்களது நான்கு வயது மகன் நிஷாந்த். நேற்று மாலை, சேகருக்கு திருமண நாள் என்பதால், குடும்பத்துடன் பைக்கில், மாதவரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். மணலி, எம். எப். எல். , சந்திப்பு அருகே கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதி பைக் விபத்துக்குள்ளானது.

இதில், பைக் நிலைதடுமாறி, கணவன் - மனைவி மற்றும் குழந்தை கீழே விழுந்து காயமடைந்தனர். அங்கிருந்த போக்குவரத்து போலீசார், மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், குழந்தை நிஷாந்த் உயிரிழந்தது தெரிய வந்தது. கணவன் - மனைவி பலத்த காயங்களுடன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரி ஓட்டுனரான, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஸ்ரீதர், (வயது 24) என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி