திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் அருகே அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் இவரது மனைவி மகாலட்சுமி தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரியும் பாஸ்கர் அதிகத்தூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலத்தை சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அகம் ஹோம் பைனான்ஸ் வங்கியில் அடமானம் வைத்து 9 லட்சத்து ₹50000 பணத்தை கடந்த 2021ம் ஆண்டு கடனாக பெற்றுள்ளனர் கடந்த 2023 டிசம்பர் வரை மாதம் 25 ஆயிரம் ரூபாய் தவணைத் தொகையாக கட்டி வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாஸ்கருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் மாதத் தவணை கட்ட முடியாமல் திணறியுள்ளனர் இதற்கிடையில் வங்கியில் இருந்து வந்த ஊழியர்கள் மாத தவணையை கட்ட கூறி நிர்பந்தித்து வந்ததால் மாதத் தவணை கட்ட முடியாமல் நிலையில் ஊழியர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகள் பேசியதால் பாஸ்கர் தற்கொலைக்கு முயன்று உள்ளார் இதை அடுத்து வங்கி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டை காலி செய்து தரும்படி தற்போது தொடர்ந்து வங்கி தரப்பில் தொல்லை தந்து வந்ததால் மன உளைச்சல் அடைந்த மகாலட்சுமி வீட்டில் பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார், அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.