பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முதல்வருக்கு கோரிக்கை

65பார்த்தது
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர சென்ற ஆட்சியில் கோரிக்கை வைத்து போராடியபோது சுமார் 5000 ற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு பணியிடை நீக்கம் செய்தும் பல ஆயிரம் பேரை பணியிடம் மாற்றம் செய்து பந்தாடினார்கள். இந்நிலையில் போராட்டக்களத்திற்கே நேரடியாக வந்து நீங்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட வேண்டாம் நான் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என சூளுரை ஆற்றினீர்கள். இதே நிலையில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவலராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் திகழ்ந்தாரோ அதே வடிவில் தான் தங்களை காண்கிறார்கள். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க முதலைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி