அங்கன்வாடி சங்கம் சார்பில் மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம்

77பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் பட்டை நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தும் நூதன போராட்டம்மானது
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின்
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், லூர்துசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் 40ஆண்டுகாலம் பணி புரிந்து ஒய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மட்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் அரசு ஊழியர்களுக்கு ₹6750 அகவிலைப்படியுடன் ஒய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பழிவாங்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்,
மேலும் தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதி 313-ன்படி ஆட்சிக்கு வந்தால் இந்த ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பில் 2. 57 காரணியில் ஓய்வூதியம் மற்றும் ஊதிய திருத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த தமிழ்நாடு அரசு இது வரை அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசை கண்டித்து நெற்றியில் பட்டை நாமமிட்டும், மடிப்பிச்சை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பி 100-க்கும்
மேற்பட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி