திருவள்ளூர் மாவட்டத்தின்
புதிய ஆட்சி தலைவராக
மு. பிரதாப்இன்று பதவி ஏற்றுக்கொண்டார் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது.
முதல்வரின் அறிவுரையின்படி வளர்ச்சி பாதையில் திருவள்ளூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றஅனைத்து துறைகளுடன் இணைந்து
பணிகள் மேற்கொள்ளப்படும் மற்றும் இது மக்களுக்கான அலுவலகம்பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் சந்திக்கலாம்
என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சித் தலைவர்கள்உட்பட 33 ஐஏஎஸ் அதிகாரிகளைஇடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய டாக்டர் பிரபுசங்கர் மாற்றப்பட்டு அவர் சென்னை போக்குவரத்து கழக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராகமு பிரதாப் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுரையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள்தோய்வின்றி
அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக கொண்டு வர பாடுபடுவேன் மற்றும்இது மக்களுக்கான அலுவலகம் எனவே பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என அவர் கூறினார்.