திருவள்ளூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி 2026 தேர்தலை முன்னிட்டு கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் தலைமையில், மாவட்ட கழக செயலாளர் எஸ். சந்திரன் எம்எல்ஏ முன்னிலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்பி மற்றும் V. G. ராஜேந்திரன் கலந்து கொண்டனர். தேர்தல் முன்னெடுப்புகள் மற்றும் முக்கியக் கட்டமைப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.