திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் தேவையை எதிர்நோக்கிய புதிய பண்டக சாலை ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டெத்தஸ்கோப், மருத்துவ புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள், சென்னைக்கு செல்லாமலே நியாய விலையில் ஒரே இடத்தில் கிடைக்கும். இந்த வசதியை மாவட்ட கூட்டுறவு மண்டல இணை இயக்குனரகம் தொடங்கியுள்ளது. மாணவர்களுக்கு நேரம், செலவு இரண்டையும் மிச்சப்படுத்தும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது