திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சுப்பாரெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் கொசஸ்தலை ஆற்றைக் கடந்து தான் தங்களுடைய ஊருக்குச் செல்ல வேண்டும். இந்த கரைக்கு அப்புறம் சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபாளையம் என இரண்டு கிராமங்கள் இருக்கின்றன. தரைப்பாலத்தைக் கடந்து தான் இந்த ஊர் மக்கள் தங்களுடைய கிராமத்திற்குச் செல்ல வேண்டும். இந்த நிலையில் பூண்டி நீர்த்தக்கத்திலிருந்து சுமார் 16,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதனால் பள்ளிக்குச் சென்ற மாணவர்களும் வேலைக்குச் சென்றவர்களும் தங்களுடைய ஊர்களுக்குச் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் தற்போழுது வருவாய்த்துறை இவர்களுக்கு ஒரு படகு ஏற்பாடு செய்துள்ளது. இதில் தற்போழுது அக்கரையில் இருந்து இந்த பகுதிக்கு வருபவர்களுக்கும், இந்த பகுதியில் இருந்து அக்கரைக்குச் செல்பவர்களுக்கும் போவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது வேலைக்குச் சென்று வருபவர்களும், பள்ளி மாணவர்களும் இந்த படகின் மூலம் தங்களுடைய கிராமத்திற்குச் செல்கின்றனர்.