பாராளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து தவறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் திருவள்ளூர் மத்திய மாவட்டம் கடம்பத்தூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி வருகிற 23ஆம் தேதி திங்கட்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என அறிவித்தார் பூண்டி ஒன்றியம் திருவள்ளூர் நகரம் அடங்கிய திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி புரட்சி பாரதம் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் திருவள்ளூர் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலி பணியிடங்களாக உள்ள செவிலியர் மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் தீர்மானம் ஏற்றப்பட்டது வருகிற 2026 தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளதாக ஜெகன் மூர்த்தி பேட்டி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய போது ஜெகன்மூர்த்தி வேதனை கட்சியினர் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிந்ததாகவும் கட்சிக்கு செயல்படாதவர்கள் கட்சி விரோத செயலில் ஈடுபடுபவர்கள் கட்சியை விட்டு செல்லலாம் என்றும் எச்சரித்தார், இப்படி இருந்தால் எப்படி கூட்டணி கட்சித் தலைவர்கள் மதிப்பார்கள் எப்படி கூடுதல் இடங்களை கேட்டு பெற முடியும் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்