கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

55பார்த்தது
திருவள்ளுவர் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (59) தனியார் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு இந்திரா (51) மனைவியும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.  
மேலும் செல்வராஜ் தனது 2 மகளுக்கும்  திருமணம் செய்து கொடுத்துவிட்டார், மகன் சாம்ராஜ் மருமகள் புனிதா ஆகியோர் தங்களுடன் வசித்து வருகின்றனர்.   இந்நிலையில் செல்வராஜ் குடல் புற்றுநோயால் கடந்த ஓராண்டுக்கு மேல்  அவதி உற்று வந்தார். இதனால் மன வேதனை அடைந்த செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்வராஜ், மனைவி இந்திரா ஆகிய 2 பேரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி