சென்னை கொரட்டூரில் ஜிம் டிரைனர்- ஜிம்மில் மயங்கி விழுந்து பலி
அடுத்த மாதம் நடைபெற இருக்கக்கூடிய ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்த நிலையில் உயிரிழந்ததால் பரபரப்பு. *
*உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சோர்வானதால் ஜிம்மில் இருக்கக்கூடிய குளியலறையில் சென்று குளித்த போது நேர்ந்த சோகம். *
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் யோகேஷ்/41 இவருக்கு திருமணமாகி 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கொரட்டூரில் உள்ள ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது உடல் சோர்வானதால் குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரில் குளித்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் யோகேஷ் கழிவறையில் மயங்கி விழுந்து உள்ளார் உடனடியாக ஜிம்மில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பேரில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் சென்னை கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.