சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை தமிழக எல்லையில் உள்ள பொன் பாடி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை இட்டதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்து வந்தது உறுதி செய்தனர். இதை அடுத்து இருவரை பிடித்து திருத்தணி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணியில் குட்கா விற்பனை செய்ய 30 கிலோ குட்காவை எடுத்து வந்துள்ளனர். இதன் மதிப்பு ரூபாய் 70 ஆயிரம் ஆகும்
இதனை அடுத்து ஆந்திர மாநிலம் நகரி சேர்ந்த மோகன்(52), சாய் சரண்(27) தந்தை, மகன் எடுத்து வந்தவர்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும், 70, 000 மதிப்புடைய குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இவர்கள் இருவரையும் கைது செய்து,
திருத்தணியில் நீதிபதி முன்பு ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.