திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் முன்னாள் மாநில துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட முன்னாள் செயலாளர் ரமேஷ், வன்னியர் சங்கத்தினர், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கொட்டும் மழையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்களைக் கடந்தும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இணைந்து கொட்டும் மழையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மழையில் நனைந்தபடி பேரணியாக வந்து முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குருவே கடவுளே என்ற கோஷத்துடன் வேன் மீது ஏறி நின்று கைகளில் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து பதாகைகளை ஏந்தி வட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.