ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள குட்டையை மீட்க கோரிக்கை

368பார்த்தது
ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள குட்டையை மீட்க கோரிக்கை
வெள்ளவேடு அடுத்துள்ளது, திருமணம் கிராமம். இந்த கிராமத்தில் சர்வே எண்: 404ல், 1 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை குட்டை உள்ளது. இதில் சேகரமாகும் தண்ணீரை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவரால், இந்த குட்டை ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, திருமணம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள குட்டையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி