திருவள்ளூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எம்பி சசிகாந்த் செந்தில் பங்கேற்று இஸ்லாமியர்களுடன் நோன்பை திறந்தார்.
திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏகேஎம் மினி ஹாலில் நடைபெற்றது திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் முன்னாள் மாவட்ட தலைவர் ஏ ஜி சிதம்பரம் திருவள்ளூர் நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் அசேன் பாஷா பங்கேற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுடன் தொழுகைக்கு பின்னர் அவர்களுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருவலங்காடு வட்டார காங்கிரஸ் அமைப்பாளர் ராமன் கடம்பத்தூர் ஒன்றிய வடக்கு வட்டாரத் தலைவர் சதீஷ் திருவள்ளூர் நகர காங்கிரஸ் தலைவர் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ரமலான் நோன்பை துறந்தனர்.