திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு அடுத்த ஒதிகாடு கிராமத்தில் வசிக்கும் யோனோ இவர் சென்னை (அப்பல்லோ) தனியார் மருத்துவமனையில் மெயின்டனன்ஸ் பிரிவில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் அவர்
உறவினரின் இறப்புக்காக வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த குடும்பத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது துணிமணிகள் சிதறியபடி பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5, லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது
இந்த சம்பவம் குறித்து யோனா புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புல்லரம்பாக்கம் போலீசார். கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம், நகையை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.