பொம்மியம்மாள் சமேத குருமூர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம்

60பார்த்தது
திருவள்ளூரில் உள்ள அருள்மிகு பொம்மி அம்பாள் சமேத ஸ்ரீ குரு முத்தீஸ்வரர் ஆலயத்தில் மாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் கோவில் வளாகத்தில் நடைபெற்று சிவபெருமான் பொம்மி அம்மாளுடன் வீதி உலா வந்தார். திருவள்ளூர் ஆட்சியரகம் அருகே அமைந்துள்ள 41 அடி உயர ராஜலிங்கத்துடன் எழுந்தருளியுள்ள அருள்மிகு பொம்மியம்மாள் சமேத குருமூத்தீஸ்வரர் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் கடந்த ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7: 30 மணிக்கு துவங்கி நடைபெற்றது பொம்மி அம்மாள் சமேத குருமூத்தீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கிய நிகழ்வானது ஐந்து நாட்கள் சுவாமி திருவீதி உலா உற்சவங்கள் யாகசாலை பூஜை நடந்தேறியது இதில் ஏராளமான பக்தர்கள் குருமூத்தீஸ்வரர் அருளை பெற்றனர் விழாவின் ஐந்தாம் நாளான இன்று குரு முத்தீஸ்வரருக்கும் பொம்மி அம்மாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய சிவன் ஊர்வலமாக டோல்கேட் சிவி நாயுடு சாலை நேதாஜி சாலை பெரும்பாக்கம் வீதி உள்ளிட்ட பிரதான வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி