திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூஜ்ஜிரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன் பூச்சி மருந்து குடித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
இந்த நிலையில் உயிரிழந்த ராஜேந்திரனின் பிரேதத்தை பெறுவதற்காக உறவினர்கள் வந்த போது ராஜேந்திரன் உடலுக்கு பதிலாக வடமாநில இளைஞரின் உடலை ஒப்படைக்க முயன்றதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
மேலும் ராஜேந்திரனின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் வட மாநில இளைஞரின் உடலுக்கு பதிலாக பீகாருக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்த நிலையில் உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அமரர் அறை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனை அடுத்து மீண்டும் ராஜேந்திரன் உடலானது பீகார் மாநிலத்திலிருந்து மீண்டும் திருவள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.