ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் கருப்பு பேட்ச் போராட்டம்

67பார்த்தது
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற 2 1/2 மணி நேர பேச்சுவார்த்தை: ஆட்சியர் வருத்தம் தெரிவித்ததால் ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட ஆசிரியர் சங்கத்தினர் கருப்பு பேட்ச் அணியும் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக
அறிவிப்பு




திருவள்ளூர் மாவட்டம்,
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் குறைந்ததால் ஆய்வுக்கு சென்ற ஆட்சியர் பிரதாப் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதால் மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட ஆசிரியர் கூட்டமைப்பினர் கருப்பு பேட்ச் அணிந்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர் இந்த நிலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட சூழலில் ஆட்சியர் பிரதாப் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இராதாஸ் உள்ளிட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து இரண்டரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வருத்தம் தெரிவித்ததால் நாளை நடைபெறும் போராட்டத்தை கைவிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆறாம் தேதி வரை அறிவித்திருந்த கருப்பு பேட் அணியும் போராட்டத்தையும் கைவிட்டனர் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பாடுபட போவதாக ஆசிரியர்கள் உறுதியளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி