அதிமுக நோன்பு திறப்பு நிகழ்ச்சி: மு. அமைச்சர் பங்கேற்பு

52பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின் மற்றும் கழக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தனர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட நிலை அவர்களுக்கு கஞ்சி, பழவகைகள், குளிர்பானங்கள் ஆகிய வழங்கப்பட்டது. இதையடுத்து இஸ்லாமிய பொதுமக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்: இந்த நோன்பு முடிந்து அடுத்த நோன்பு முடிவதற்குள் அதிமுக ஆட்சி அமையும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என பேசினார்.
தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் வேளையில்
இரண்டு நாட்களில் 11 கொலைகள் நடந்துள்ளது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என சட்டமன்றத்திலும் எடுத்துரைத்து வருகிறோம் மக்கள் மன்றத்திலும் எடுத்துரைத்து வருகிறோம் இதற்கு 2026 இல் விடை கிடைக்கும் என பேசினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி