மின் அதிகாரி வீட்டில் புகுந்த பாம்பால் பரபரப்பு

577பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் பூங்கா நகர் மக்கள் நல்வாழ்வு மன்றம் பகுதியில் அமைந்துள்ள பவளமல்லி தெருவில் சேவியர் பிரான்சிஸ் மின் அதிகாரி வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்ததாக தீயணைப்பு அலுவலகத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் கிடைத்தது.

உடனடியாக மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பேரில் உதவி மாவட்ட அலுவலர் எஸ்.வில்சன் ராஜ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பத்து நிமிடத்தில் அங்கு கடந்து வந்து வீட்டின் பின்புறம் புகுந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். இவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் விநாயகமூர்த்தி பிரகாஷ், சதீஷ், எம். எஸ்.கார்த்திக், மோகன் பாபு ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி