திருவேற்காடு அருகே குண்டும் குழியுமாக காட்சி அளித்த சாலை

76பார்த்தது
திருவேற்காடு அருகே குண்டும் குழியுமாக காட்சி அளித்த சாலை
திருவேற்காடு அடுத்த மாதிராவேடு சந்திப்பில், பூந்தமல்லி நெடுஞ்சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளித்தது.

இதனால் வாகன ஓட்டிகள் தினமும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தில் சிக்கி கடும் சிரமப்பட்டனர்.


இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர்.


இதையடுத்து கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சாலைகள் ஆங்காங்கே மேலும் பள்ளங்கள் அதிகரித்தது இதையடுத்து போரூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தில் கற்களை கொட்டி சீரமைக்க முடிவெடுத்தனர்.


அதன்படி நேற்று திருவேற்காடு, மாதிரவேடு சந்திப்பில் ஜே. சி. பி. உதவியுடன் குண்டும், குழியுமாக உள்ள சாலையை செங்கல் ஜல்லி கொட்டி சீரமைத்தனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் போக்குவரத்து போலீசாரின் இந்த பணியை வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி