திருவள்ளூர் அடுத்த
மேல்நல்லாத்தூர், கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் கிராம கமிட்டி சார்பாக அருள்மிகு பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி திருக்கோயில் திருவிழா மிக விமரிசையான முறையில் நடைபெற்றது, பின்னர்
மலர் மாலை ஜோடித்த வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றபோது பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கே பி எச் ஹரிபாபு, அன்பழகன், பில்லா, சுந்தரம், வைலெட்,
கிராம கமிட்டி தலைவர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.