திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து அதிகரித்து 35 அடி உயரத்தை எட்டி வருவதால் ஒன்பது மணி அளவில் வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட உள்ளது, பூண்டி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1290 கன அடி வருகிறது
மொத்த கொள்ளளவு 3631 மில்லியன் கன அடி அதில் தற்போது
3121 மில்லியன் கன அடி உள்ளது மொத்த உயரம் 35 அடி அதில் தற்போது 34. 92 அடி நீர்மட்டம் உள்ளது பூண்டி அணையில் இருந்து லிங்க் கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்பட்டு வருகிறது புழல் ஏரிக்கு 300 கன அடி செல்கிறது பேபி கால்வாயில் சென்னை குடிநீருக்கு நீரேற்று நிலையம் மூலம் வினாடிக்கு 17 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வினாடிக்கு ஆயிரம் கன அடி மதகு வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றைக் கடந்து செல்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணி துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்