2 போலி மருத்துவர் கைது.

52பார்த்தது
2 போலி மருத்துவர் கைது.
*போலிமருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் - 2 போலி மருத்துவர் கைது*

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மீது போலிமருத்துவர்வைத்து மருத்துவமனை செயல்படுகின்றது என்று (104 Calls) வந்த புகாரினையடுத்து DMS தேனாம்பேட்டை Joint Director இளங்கோ அவர்கள் தலைமையில் இன்று மருத்துவமனையில் ஆய்வு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

அகஸ்டின், பரதன் என்ற 2 போலி மருத்துவர்கள் உரிய சான்றிதழ் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்துள்ளதால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அகஸ்டின் என்பவர் மருத்துவர் என கூறி 2 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவம் பயின்ற நிலையில் இந்தியாவில் பதிவு செய்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்த நிலையில் போலி சான்று மூலம் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

பரதன் என்பவர் சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவர், 2014ம் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி பெற்றிருந்தார். அதன் பின் புதுப்பிக்காமல் சிகிச்சை அளித்துவந்துள்ளதால் மருத்துவ சட்டத்தின் படி குற்றம் என மருத்துவ அதிகாரிகள் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி