உயிரே போனாலும் பாசிச கொள்கைக்கு அடிபணிய மாட்டோம்: முதல்வர்

65பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம்

பா. ஜ. க. வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! அதற்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்மானது
திருவள்ளூரில் உள்ள திருப்பாச்சூர், பகுதியில்
அமைச்சர் ஆவடி
சா. மு. நாசர், மாவட்ட செயலாளர்கள்
திருத்தணி எஸ். சந்திரன்
வல்லூர்
எம். எஸ். கே. ரமேஷ்ராஜ்,
ஆகியோர் தலைமையில்
நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரை ஆற்றினார்,

அதில்
ஒன்றிய அரசு மும்மொழிப் கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி வழங்கும் என அறிவித்த நிலையில் இதற்கு தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே போதும் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது எனவும்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் பள்ளிக் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ. 2152 கோடியை தராமல் ஒன்றிய அரசு தமிழக மாணவர்களை வஞ்சித்து வருவதாகவும்,
அதேபோல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு மூலம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும்,
இதனையடுத்து ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருவதாகவும்.
முதலமைச்சர்
மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி