இறைச்சி கடைகளுக்கு எச்சரிக்கை.

888பார்த்தது
இறைச்சி கடைகளுக்கு எச்சரிக்கை.
திருத்தணி நகராட்சி இடங்களில் சிலர் சாலையோரம் இறைச்சி கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இவர்கள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதும், வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நடுசாலையில் நிறுத்திவிட்டு இறைச்சி வாங்குவதற்கு காத்திருப்பதால் மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இது குறித்து திருத்தணி நகர வாசிகள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் கூறியதாவது: சாலையோர இறைச்சி கடைகளுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கியுள்ளோம். ஓரிரு நாளில் அபராதம் விதித்து வசூலிக்கப்படும். சாலையோர இறைச்சி கடைகளுக்கு வசதியாக கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி