பூந்தமல்லியில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில், 1893ல் திறக்கப்பட்ட விக்டோரியா மெமோரியல் கட்டடம் உள்ளது. ராணுவ வீரர்கள், குதிரைகள் தங்கும் அறைகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத தளவாட பொருட்கள் பாதுகாத்து வைக்கும் இடமாக, இந்த கட்டடம் செயல்பட்டது. செங்கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம், 5,500 சதுர அடியில் பரந்து விரிந்து, பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. முதல் உலகப்போர் வெற்றியின் நினைவாக, விக்டோரியா மெமோரியல் கட்டடம், பார்வையற்றோர் பள்ளியாக, 1931ம் ஆண்டு மாற்றப்பட்டது. தற்போது, தமிழக மாற்றுத்திறனாளிகள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கட்டடம், 135 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது. தற்போது பராமரிப்பின்றி உள்ளது. கட்டடத்தின் மீது, பல இடங்களில் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டடத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.