10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத வி. ஏ. ஓ. , அலுவலகம்.

1391பார்த்தது
10 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத வி. ஏ. ஓ. , அலுவலகம்.
திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம் அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது.


இந்த கட்டடம் கட்டி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் அலுவலக கட்டடத்தை முறையாக பராமரிக்கவில்லை. தற்போது கட்டடம் பழுது அடைந்தும், பயனாளிகள் அமரும் இடம் முழுதும் சிமென்ட் தளம் சேதம் அடைந்துள்ளன.

மேலும், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர்கள் தினமும் அலுவலகத்திற்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும் மின் இணைப்பு இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர்கள் 'ஆன்-லைன்' வாயிலாக சான்றுகள் வழங்குவதற்கு முடியாமல் திணறுகின்றனர்.

எனவே கோரமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி